Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔5.Dec 2018

நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணலில் விக்ரமசிங்க, முதலில் அவருடைய கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது, இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லாத

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள 0

🕔5.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவருவதே இறுதி வழியாக அமையும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பில், தனது விமர்சனத்தை ‘ட்விட்டரில்’ வெளியிட்டுள்ள

மேலும்...
அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி

அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி 0

🕔4.Dec 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு, இன்று மாலை கொழும்பு

மேலும்...
தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள்

தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள் 0

🕔4.Dec 2018

நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
ஜனாதிபதிக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் 0

🕔4.Dec 2018

ஜனாதிபதிக்கும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை காலை, விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது; நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் கட்டளைகளையும் ஜனாதிபதி வழங்கியதாக, அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான

மேலும்...
225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு

225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு 0

🕔3.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கையெழுத்திட்டாலும், அவரை ஒருபோதும் தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெற்றபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியதாக, லக்ஷ்மன்

மேலும்...
ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள்

ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள் 0

🕔3.Dec 2018

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல்

மேலும்...
நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார்

நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார் 0

🕔3.Dec 2018

நாடாளுமன்ற கலைப்பு சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி மீளப்பெற மாட்டார் எனத் தெரியவருகிறது. சட்டமா அதிபருடன் இது விடயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியது. அதன் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது. இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐக்கிய தேசிய முன்ணியையும் ஜனாதிபதி மைத்ரி இன்று

மேலும்...
ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்தி வைப்பு

ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்தி வைப்பு 0

🕔2.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாளை இரவு 8.00 மணிக்கு மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது. சமகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பான

மேலும்...
ஜனாதிபதிக்கும் ஐ.தே.முன்னணிக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஐ.தே.முன்னணிக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு 0

🕔2.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வெள்ளிக்கிழமை இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமாக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மீளவும் தெரிவித்துள்ளார். ஆயினும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின்

மேலும்...
ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம் 0

🕔29.Nov 2018

“ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை, பிரதமராக நியமிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;கடந்த ஒக்டோபர் மதம் 26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த

மேலும்...
புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.Nov 2018

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைளைப் பின்பற்றி, பெரும்பான்மையினைக் காண்பித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அதேவேளை, “மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அப்படி அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால்,

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி 0

🕔23.Nov 2018

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதியைக் வேண்டிக் கொள்வதாக, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும், இது வரை அவர்கள் அதனைக் காட்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்

மேலும்...
ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர்

ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர் 0

🕔22.Nov 2018

நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டிருந்த நாட்டுமக்களின் நலனை அதிகாரத்தின் ஊடாக சீர்குலைக்கும் வகையில், அவர் செயற்பட்டு வருகின்றார் எனவும் சமந்தா கூறியுள்ளார். நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை

மேலும்...
தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார்

தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார் 0

🕔18.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். தேவையாயின் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுவாக தன்னுடன் பேச வருமாறும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்