ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவருவதே இறுதி வழியாக அமையும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பில், தனது விமர்சனத்தை ‘ட்விட்டரில்’ வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, மேற்படி விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நேற்றைய உரையின் மூலம், அவர் ஆட்சி செய்வதற்குப் பொருத்தமற்றவர் என்பது நிரூபணமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள மங்கள சமரவீர, ஜனாதிபதியின் உரையினை கூச்சல் மற்றும் பிதற்றல் எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைாயானது பொய்கள் நிறைந்ததாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும், திரிபடைந்ததாகவும், பாரபட்சம் கொண்டதாகவும் இருந்தது எனவும், மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவருவதே, இறுதி வழியாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி