நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார்

🕔 December 3, 2018

நாடாளுமன்ற கலைப்பு சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி மீளப்பெற மாட்டார் எனத் தெரியவருகிறது.

சட்டமா அதிபருடன் இது விடயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியது. அதன் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது.

இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐக்கிய தேசிய முன்ணியையும் ஜனாதிபதி மைத்ரி இன்று மாலை தனித்தனியாக சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில், ரணில் அல்லாத பிரதமர் ஒருவரை நியமிக்கும் தீர்மானமே இப்போதைய பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும், ரணிலை பிரதமராக நியமிப்பதென ஐ.தே.முன்னணி கூறுமாயின், பிரச்சினைக்கு இப்போது தீர்வு கிடைக்காது எனவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

(செய்தி மூலம்: ஆர். சிவராஜா – சிரேஷ்ட ஊடகவியலாளர்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்