Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம்

தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம் 0

🕔18.Nov 2018

– எம்.ஐ. முபாறக் –ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிப்புதான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறே. இந்த அதிகாரம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி மைத்திரி – ரணில் தரப்பு வெற்றி பெற்றபோதிலும் இதை இல்லாதொழிக்கும் திட்டம் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்ததில்லை.2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு

மேலும்...
ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு

ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும், சபாநாயகரையும் இன்று சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்திருந்த நிலையில், இந்த சந்திப்பில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்கள் விடுதல முன்னணியும் (ஜே.வி.பி) மேற்படி சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்

மேலும்...
அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும்

மேலும்...
ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி

ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி 0

🕔15.Nov 2018

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசிய முன்னணிக்கான  பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை

மேலும்...
பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல்

பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல் 0

🕔15.Nov 2018

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.இன்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த சவாலை முன்வைத்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றி

மேலும்...
“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்

“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம் 0

🕔13.Nov 2018

“ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது” என, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் செய்யும்: தலைவர் றிசாட் பதியுதீன் அறிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் செய்யும்: தலைவர் றிசாட் பதியுதீன் அறிவிப்பு 0

🕔10.Nov 2018

நாட்டின் அரசியலமைப்பை மீறி, நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி, இந்தத் தீர்மானத்தை

மேலும்...
சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு

சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்

மேலும்...
நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி 0

🕔9.Nov 2018

– மப்றூக் – நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்படும் எனத் தெரிவயவருகிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு, அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடந்த 26ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரி, பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ஷவை

மேலும்...
வீடமைப்பு அமைச்சராக விமல் நியமனம்

வீடமைப்பு அமைச்சராக விமல் நியமனம் 0

🕔9.Nov 2018

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவும் கலந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், வீடமைப்பு அமைச்சராகவே விமல் வீரவங்க பதவி வகித்திருந்தார். புதிய

மேலும்...
ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில்

ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நடப்பவை குறித்து எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என,  ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர் என அர்த்தம் தரும் வகையில், ‘வண்ணாத்திப்பூச்சி’ வாழ்க்கைக்குள் அவர் பிரவேசித்துள்ளதாக, அண்மையில் ஜனாதிபதி ‘குத்தல்’ பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து, ஹிருணிகாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அவர்

மேலும்...
அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல்

அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி,

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ 0

🕔7.Nov 2018

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சிறிசேன  தன்னிடம் கேட்டது உண்மை என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்  இன்று புதன்கிகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். ஆனாலும், ஜனாதிபதியின் கோரிக்கையினை கொள்கை அடிப்படையில் தான் நிராகரித்ததாகவும் சஜித் குறிப்பிட்டார். “ரணில்

மேலும்...
ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம்

ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆளுந்தரப்பு – நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; மக்களின் விருப்பங்கள் குறித்தோ, நாட்டின் பிரச்சினைகள் தொடர்பிலோ

மேலும்...
மஹிந்த தோற்றால், அடுத்து என்ன: சிறிசேனவின் Plan – B

மஹிந்த தோற்றால், அடுத்து என்ன: சிறிசேனவின் Plan – B 0

🕔6.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பவே விளங்கி வைத்துக் கொண்டு, வியாக்கியானம் செய்து வருகின்றனர். சிலவேளைகளில், உண்மை நிலைவரம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்