வீடமைப்பு அமைச்சராக விமல் நியமனம்

🕔 November 9, 2018

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவும் கலந்து கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், வீடமைப்பு அமைச்சராகவே விமல் வீரவங்க பதவி வகித்திருந்தார்.

புதிய அரசாங்கத்தில் இத்துடன் 10ஆவது தடவையாக அமைச்சுப் பதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Comments