தம்பிக்கு ‘தரகர் வேலை’ பார்த்த அண்ணன்களை, இலங்கை கண்டுள்ளது; ரவூப் ஹஸீருக்கு, ஐ.ச.கூட்டமைப்பு பதிலடி
சம பாலினத்தவர்களுக்கு துணைகளைக் கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை என்கிற போதும், தம்பிக்கு பெண்ணைக் கூட்டிக் கொடுத்த அண்ணன்களை இலங்கை கண்டுள்ளது என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரவூப் ஹஸீருக்கு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எழுதியுள்ள பதிலொன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘வண்ணத்துப் பூச்சி’ பற்றிய உரையானது, தற்போது வாதப் பிரதிவாதங்களுக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புபடுத்தி, ‘வண்ணத்துப் பூச்சி’யை சின்னமாகக் கொண்ட, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பை, கேலி செய்யும் வகையில், மு.காங்கிரஸ் தலைவரின் சகோதரர் ரவூப் ஹஸீர் என்பவர் ‘பேஸ்புக்’ இல், பதிவொன்றினை இட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் எழுதியுள்ள பதிலில், தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு;
ரவூப் ஹஸீர் தனது முகநூலில் வண்ணத்துப் பூச்சி யாருடைய கட்சி? என்று கேட்டு நக்கலான பதிவொன்றை இட்டுள்ளார்.
ஜனாதிபதியின் வண்ணத்துப் பூச்சி பற்றிய உரையின் பின்னர் எழுந்துள்ள இப்பூச்சி பற்றிய பிரபல்யத்தினால் ஏற்பட்ட ‘கிளர்ச்சி’ மேலீட்டினால்தான், ஹஸீர் இப்பதிவை எழுதியிருக்கிறார் போலும்.
ஜனாதிபதியின் பேச்சு, ஆண் – பெண் இருபாலாருக்கிடையிலும் இருந்துவரும் சமபாலினத்தினர் தமது இயற்கையான காம உணர்ச்சியைக் ‘கழற்றி’ விடுவதற்கான வழி முறையைப் பற்றிய கேலிப் பேச்சாகும். இதுதான், தற்போது ‘வண்ணத்துப் பூச்சி’ சாதாரண மக்களின் உணர்ச்சிக்குள் இலகுவாகப் புகுந்து, அவர்கள் கட்சி அடிப்படையில் பிரிந்து நின்று கேலி பேசுவதற்கும், விமர்சிப்பதற்கும் காரணமாகும்.
சமபாலின உறவைப் பழக்கமாகக் கொண்டோர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஜனாதிபதி தனது ‘வண்ணத்துப் பூச்சி’ பற்றிய பேச்சை வாபஸ் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வூடக சந்திப்பில் கலந்து கொண்டு, ‘வண்ணத்துப் பூச்சி’ யாருடைய கட்சி என்ற கேள்வியை ஹஸீர் கேட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
யாருடைய கட்சி? என்ற அவருடைய கேள்வி, ஒரு கட்சி ஓர் ஆளுடையதாக இருக்கிறது என்ற அவரது அனுவத்தினாலும், பிரேமையினாலும் எழுந்ததாகும். முஸ்லிம் காங்கிரஸ் மக்களுடைய கட்சியாக இருந்து, பின்னர் ஹஸீருடைய தம்பியின் கட்சியாகக் களவாடப்பட்டது என்பதை அவரறிவார். இதனால்தான் காங்கிரசில் இவ்வளவு பிரிவினைகள் ஏற்பட்டது என்பதையும் அவர் புரிந்திருப்பார். யாருடைய கட்சி என்பதற்குப் பதிலாக, எந்தக் குடும்பத்தின் கட்சி என்ற கேள்வியை ஹஸீர் கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மேலும், 2000ஆம் ஆண்டு 01 லட்சத்து 18ஆயிரம் ரூபாவாக இருந்த, ‘காணிவல்’ ஐஸ் கிறீம் கம்பனியின் மாதாந்த லாபம் ( இறைவரித் திணைக்களத்தின் ஆவண ஆதாரம் உண்டு) காணிவலின் காணி, காலி வீதியில் இருந்து பின் பக்கமாக உள்ள அடுத்த தெரு வரை நீள்வதற்கு போதுமானதா என்பதை, கணக்குப் பார்க்க கணக்குப் பிள்ளை ஒருவர் போதும்.
தற்போது புதிதாக வாங்கப்பட்டுள்ள காணிவல் காணிக்குள் 60 மாடி ‘அபார்ட்மென்ட்’ கட்டுவதற்கான திட்டவரைவு தாயாராக இருக்கிறதே, அதைக் கட்டி முடிக்க எவ்வளவு பணம் கையிருப்பில் உள்ளது? என்பதைச் சொல்வதற்கு வேண்டுமானால், ஒரு தேர்ந்த கணக்காளரைக் கேட்கலாம். ( ஆட்சி மாற்றம் உறுதியானால் இத்திட்டம் கிடப்பில் போடப்படலாம்). இன்னும் ஏராளமான சொத்துகள் பற்றி கூறலாம், அவற்றைப் பின்னர் பார்ப்போம். இவையெல்லாம் 118000/- மாதாந்த வருமானத்திலல்ல, கட்சியை வைத்து நடத்தும் அரசியல் வியாபாரத்தினால் வந்த கொழுத்த வருமானத்தினால் சாத்தியமானது அல்லவா?
மேலும், கல்முனை மாநகர சபையிலும், சம்மாந்துறை பிரதேச சபையிலும் உங்கள் தம்பியிடம் முன்னர் இருந்த அமைச்சின் பல கோடி பெறுமதியான வேலைத் திட்டங்கள் பற்றிய கூட்டங்களில், நீங்கள் பங்குபற்றி இருந்தீர்கள். அங்கு உங்களுக்கென்ன வேலை? கொந்தராத்து மற்றும் கொமிசன் கொள்ளைகளுக்கான முகவர் வேலை என்பதை விடவும் வேறென்ன.
மேற்சொன்ன விதமான எவ்வித களங்கமுமற்ற ‘வண்ணத்துப் பூச்சி’க் கட்சியை கேலி செய்வது, உங்களுக்குத் தேவையில்லாத வேலை.
சமபாலின உடலுறவு கொள்வோருக்கு ஆணை ஆணுக்கும், பெண்ணைப் பெண்ணுக்கும் கூட்டிக் கொடுத்ததாக எவரும் சொல்ல யாரும் கேள்விப்பட்டதாக நான் அறியவில்லை.இவ்வாறான புறோக்கர்களைச் சந்தையில் காணவுமில்லை. ஆனால், தம்பிக்குப் பெண்ணைக் கூட்டிக் கொடுத்த அண்ணனை இலங்கை கண்டுள்ளது என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.