ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில்

🕔 November 7, 2018

ணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நடப்பவை குறித்து எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என,  ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர் என அர்த்தம் தரும் வகையில், ‘வண்ணாத்திப்பூச்சி’ வாழ்க்கைக்குள் அவர் பிரவேசித்துள்ளதாக, அண்மையில் ஜனாதிபதி ‘குத்தல்’ பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து, ஹிருணிகாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை கண்டித்த ஹிருணிகா;

“ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கும் அறைக்கும் செல்வாரா” எனக் கேட்டார்.

“மற்றவர்கள் மீது நான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிருபிக்கவேண்டிய தேவை ஏற்படுமென்றால், நான் அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கமாட்டேன்” என கூறினார்.

“மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எங்களுக்கு தேவையற்ற விடயம். இது எங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொண்டு வராது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்பான செய்தி: ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்