ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம்

🕔 November 6, 2018

– முன்ஸிப் அஹமட் –

ணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

ஆளுந்தரப்பு – நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; மக்களின் விருப்பங்கள் குறித்தோ, நாட்டின் பிரச்சினைகள் தொடர்பிலோ கவனம் செலுத்தாத அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க வண்ணத்துப் பூச்சி வாழ்க்கையொன்றினுள் பிரவேசித்திருந்தார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஓரினச் சேர்க்கையாளர்களை சிங்கள மொழியில் இழிவாகக் குறிப்பிடுவதற்கு, வண்ணத்துப் பூச்சி எனும் சொல் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேற்படி மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; “அரசாங்கத்தின் தீர்மானங்களை அமைச்சரவையோ, ஆட்சியில் இருந்த சிரேஷ்டமானவர்களோ, ஜனாதிபதி – பிரதமரோ எடுக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் அவரைச் சுற்றியிருந்த வண்ணத்துப் பூச்சி கூட்டத்தாருமே எடுத்தனர்” என்றார்.

ஜனாதிபதி இவ்வாறு கூறியபோது, கூட்டத்திலிருந்து உரத்த குரலில் கோஷமும், கரகோஷமும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்