Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

கருவும், சஜித்தும் பொறுப்பேற்க மறுத்ததால்தான், பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்: ஜனாதிபதி

கருவும், சஜித்தும் பொறுப்பேற்க மறுத்ததால்தான், பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்: ஜனாதிபதி 0

🕔5.Nov 2018

கரு ஜயசூரியவிடமும், சஜித் பிரேமதாஸவிடமும் பிரதமர் பதவியினை ஏற்குமாறு தான் வலியுறுத்தியும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது என்றும் ஜனாதிபதி கூறினார். புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலான மக்கள்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி

வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி 0

🕔31.Oct 2018

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேவேளை, சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை செய்ய வேண்டுமாயின் தன்னை முதலில் கொல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இன்று புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்திலேயே, அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
எஞ்சியிருந்த ஒரே தீர்வு

எஞ்சியிருந்த ஒரே தீர்வு 0

🕔30.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை,

மேலும்...
மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல் 0

🕔29.Oct 2018

பாதாள உலகத்தைச் சேர்ந்த மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேற்படி

மேலும்...
மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில்

மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில் 0

🕔29.Oct 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்குமிடையில் கலாசார வேறுபாடுகளும் காணப்படுகின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அந்த வேறுபாடு என்ன என்று, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். “நான், நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவர். இதுவே எங்கள் இருவரிடையே காணப்பட்ட கலாசார வேறுபாடுகளாகும்” என்று, முன்னாள் பிரதமர் ரணில்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே, எனக்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு: ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே, எனக்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு: ஜனாதிபதி 0

🕔28.Oct 2018

தன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், தன் முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்துவதேயாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது உயிரைப் பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில், ரணில்

மேலும்...
ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு

ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Oct 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் எனும் வகையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வாகனங்களை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பாதுகாப்பினை மட்டுமே, ரணிலுக்கு வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை 8.00 மணிக்கு முன்னர் அலறி மாளிகையிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது?

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது? 0

🕔27.Oct 2018

திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2)-ன் கீழ், அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும்.

மேலும்...
அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔26.Oct 2018

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.என். நிறுவனத்தின் செய்தியறைக்குள் இன்று நுழைந்த குழு ஒருவினர், அங்கிருந்த பணியாளர்களை முரட்டுத்தனமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான

மேலும்...
பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி

பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தது. இந்த நிலையில், சமீப காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்

மேலும்...
மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர

மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர 0

🕔14.Oct 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையும் நோக்கங்கள் எவையும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, தேசிய  அரசாங்கத்துடன் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இணைந்து கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடன்

மேலும்...
மைத்திரியை நம்பி, அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது: ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்

மைத்திரியை நம்பி, அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது: ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் 0

🕔11.Oct 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வார்த்தைகளை நம்பி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தற்போதுள்ள அரசாங்கத்திலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஜனாதிபதி மைத்திரி பிரித்தெடுத்துக் கொண்டு வரட்டும். பிறகு, இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றிப் பேசலாம் என்றும், ஒன்றிணைந்த எதிரணியினர் கூறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில்

மேலும்...
மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு

மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு 0

🕔7.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம்,  பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் இல்லத்தில், மைத்திரி – மஹிந்த சந்தித்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள்

மேலும்...
மஹிந்த தரப்பில் ஒருவரை பிரமராக்க மைத்திரி உடன்பாடு: அம்பலமானது ரகசிய பேச்சு

மஹிந்த தரப்பில் ஒருவரை பிரமராக்க மைத்திரி உடன்பாடு: அம்பலமானது ரகசிய பேச்சு 0

🕔3.Oct 2018

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்துடன் பிரதமர் ரணிலை பதவி விலக்க ஏற்பாடுகளை செய்யலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆயினும், அடுத்த தேர்தல்களில் தன்னுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மஹிந்த தரப்பு பரிசீலிக்க வேண்டும் எனவும்,

மேலும்...
பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி

பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி 0

🕔3.Oct 2018

பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர் ஆகி விட்டார் எனக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபப்பட்ட சம்பவமொன்று, அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார  நேற்றைய அமைச்சரவையில், அமைச்சரவை பத்திரம் ஒன்றினை முன்வைத்திருந்தார். இந்த  நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்