தலைப்புச் செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் எனும் வகையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வாகனங்களை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பாதுகாப்பினை மட்டுமே, ரணிலுக்கு வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை 8.00 மணிக்கு முன்னர் அலறி மாளிகையிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னதாக, அலறி மாளிகையிலிருந்து ரணில் வெளியேற வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பிர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறியிருந்தார்.

(தகவல் மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)