மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு

🕔 October 7, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரம்,  பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் இல்லத்தில், மைத்திரி – மஹிந்த சந்தித்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையுமானால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேருவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; “நாட்டை விற்பனை செய்தவர்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments