பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி

🕔 October 26, 2018

– புதிது செய்தியாளர் –

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தது.

இந்த நிலையில், சமீப காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் தோன்றியிருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுக்காப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்வதற்கான திட்டமொன்று அண்மையில் அம்பலமான நிலையில், அதனுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்பவர், நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் – ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர் என, செய்திகள் வெளியாகியிருந்தமை, இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இல்லாத நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து, நாடாளுமன்றில், பெரும்பான்னையினை நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்