அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு
அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.ரி.என். நிறுவனத்தின் செய்தியறைக்குள் இன்று நுழைந்த குழு ஒருவினர், அங்கிருந்த பணியாளர்களை முரட்டுத்தனமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே, அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையினை அடுத்து, கொழும்பில் பதட்டமானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.