ஜனாதிபதிக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதிக்கும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை காலை, விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது; நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் கட்டளைகளையும் ஜனாதிபதி வழங்கியதாக, அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறும் – அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் ஜனாதிபதி பணிப்புரைகள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.