Back to homepage

Tag "கொரோனா"

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு 0

🕔8.Oct 2020

திவுலபிடிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல்வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலைப் பணியாளர்களில் 1034 பேரு க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. திவுலபிடிய பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 1725 பேருக்கு

மேலும்...
கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார்

கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார் 0

🕔7.Oct 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று

மேலும்...
மினுவாங்கொட தொழிற்சாலையில் 323  கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மினுவாங்கொட தொழிற்சாலையில் 323 கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔6.Oct 2020

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு

மேலும்...
கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு 0

🕔5.Oct 2020

கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார

மேலும்...
திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி

திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேற்படி மகள் தற்போது கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து, திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களில் பொலிஸ் ஊடரங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த

மேலும்...
பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம்

பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு

மேலும்...
ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் மூடப்பட்டது

ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் மூடப்பட்டது 0

🕔22.Sep 2020

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுதப்பட்டுள்துடன் அவர்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஜித்தா நகரில்

மேலும்...
கொரோனா இறப்பு: 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சிட மெக்சிகோ முடிவு

கொரோனா இறப்பு: 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சிட மெக்சிகோ முடிவு 0

🕔8.Sep 2020

பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ நாடு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது. மெக்சிகோ ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன.

மேலும்...
கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம்

கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம் 0

🕔7.Sep 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட காணொளியில்; “அப்பாவின் நுரையீரல் மேம்பட்டு இன்று வென்டிலேட்டர் அகற்றப்படும் என நம்பினோம். ஆனால், அந்த அளவுக்கு நடக்கவில்லை. ஆனால், அவருக்கு

மேலும்...
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு 0

🕔26.Aug 2020

கொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவுடன் இருப்பதாகவும் அவரது உடல்நலக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாகவும் அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.  பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓகஸ்ட் ஐந்தாம் திகதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும்...
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு 0

🕔26.Aug 2020

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் – கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து, கொரோனாவினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, அவரின் குடும்ப உதவியாளர் கூறியுள்ளார். ‘நான் கொரோனா பரிசோதனை செய்தேன், முடிவு நேர்மறையாக வந்துள்ளது’ என, முன்னாள் ஜனாதிபதி கையூம்

மேலும்...
கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு 0

🕔23.Aug 2020

நாட்டில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்

மேலும்...
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம் 0

🕔14.Aug 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த 05ஆம் திகதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில்,13ஆம் திகதி இரவு

மேலும்...
வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி 0

🕔24.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத்

மேலும்...
வைத்தியசாலையிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்

வைத்தியசாலையிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார் 0

🕔24.Jul 2020

அங்கொட தொற்றுநோய் சிகிச்சைக்கான வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேற்படி வைத்தியசாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இதனை அடுத்து தப்பிச் சென்ற கொரோனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்