Back to homepage

Tag "கொரோனா"

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி 0

🕔9.Nov 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பினால் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கும் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கும் வரும் 100 தொலைபேசி அழைப்புக்களில் 99 அழைப்புக்கள் முஸ்லிம்களை

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு 0

🕔7.Nov 2020

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை – வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 25 வயதான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, சிறைச்சாலைகள் மற்றும்

மேலும்...
கொரோனா: 30ஆவது மரணம் பதிவு

கொரோனா: 30ஆவது மரணம் பதிவு 0

🕔7.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதற்கமைய இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபராவார். இவர் ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார். மேற்படி நபர் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்

மேலும்...
20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை

20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை 0

🕔6.Nov 2020

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பரிசோதனை முறை மூலம் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர்

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔6.Nov 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்துக்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப்

மேலும்...
நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்: நளின் தெரிவிப்பு

நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்: நளின் தெரிவிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டின் அதி முக்கிய பிரமுகர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தம்மை தாக்கக்கூடாது என்னும் நோக்கில் சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக்

மேலும்...
பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது

பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது 0

🕔5.Nov 2020

பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு, பணத் தாள்களே பிரதான காரணமாக இருந்தன என்று விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது. பேலியகொட உப-​கொத்தணி 13 தொற்றாளர்களுடன் இனங்காணப்பட்டது. தற்போது அங்கு 5,513 தொற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது புள்ளிவிவரத் தகவல்களின் ஊடாக வெளியாகியுள்ளது. சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பின்னரே இத்தகவல் அம்பலமாகியுள்ளது.

மேலும்...
நாட்டில் 273 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்பு

நாட்டில் 273 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் கொவிட்19 நோயால் 273 பொலிஸார் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 180 பேர் மேல் மாகாணத்தில் கடமையாற்றுகின்றவர்களாவர். தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 257 ஆகவும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1302 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணி வரையில், நாட்டில் 12,187

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை 0

🕔3.Nov 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “எந்தவொரு குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வந்து பேசிக்

மேலும்...
22ஆக பதிவான கொரோனா மரணம் 21 ஆனது: இறுதி நபர் பட்டியலில் இருந்து நீக்கம்

22ஆக பதிவான கொரோனா மரணம் 21 ஆனது: இறுதி நபர் பட்டியலில் இருந்து நீக்கம் 0

🕔2.Nov 2020

நாட்டில் பதிவாகியதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த 22ஆவது கொரோனா மரணத்தை, கொரோனா மரணத்தில் உள்ளடக்குவதில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்திருந்தார். இதனையத்து அவரின் சடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி

மேலும்...
தற்கொலையினால் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: பாணந்துறையில் சம்பவம்

தற்கொலையினால் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: பாணந்துறையில் சம்பவம் 0

🕔2.Nov 2020

தற்கொலை செய்து மரணித்த ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நபரின் பிரேத பரிசோதனையின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பானந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்

மேலும்...
கொரோனா: 21 ஆவது நபர் பலி

கொரோனா: 21 ஆவது நபர் பலி 0

🕔1.Nov 2020

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளார். இது கொரோனாவினால் ஏற்பட்ட 21ஆவது இறப்பாகும். மரணித்தவர் மஹர பகுதியை சேர்ந்த 40 வயதான ஆணொருவராவார். வெலிசறை வைத்தியசாலையில் இவர் உயிரிழந்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் (9.00 மணி வரையில்) 11,060 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு

கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு 0

🕔1.Nov 2020

கொழும்பு தெற்கு போதனா (களுபோவில)வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரும், தாதியொருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்தை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் மேலும் 10 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 235 பெண் பொலிஸார், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஞாயிறு காலை 4.00 மணி வரை

மேலும்...
நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது

நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது 0

🕔31.Oct 2020

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ‘B.1.42’ என்ற குழுவுக்குரிய சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔31.Oct 2020

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை பலியாகியுள்ளார். இதன் காரணமாக நாட்டில் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இன்று காலை நிலைவரப்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்