கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு

🕔 November 1, 2020

கொழும்பு தெற்கு போதனா (களுபோவில)வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரும், தாதியொருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்தை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் மேலும் 10 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 235 பெண் பொலிஸார், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிறு காலை 4.00 மணி வரை 10,663 பேர் இதுவரை நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4,399 பேர் சுகமடைந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Comments