தற்கொலையினால் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: பாணந்துறையில் சம்பவம்

🕔 November 2, 2020

ற்கொலை செய்து மரணித்த ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நபரின் பிரேத பரிசோதனையின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பானந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொரோனாவல் பாதிக்கப்பட்ட 22 ஆவது நபர் இறந்துள்ளார்.

Comments