பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது

🕔 November 5, 2020

பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு, பணத் தாள்களே பிரதான காரணமாக இருந்தன என்று விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது.

பேலியகொட உப-​கொத்தணி 13 தொற்றாளர்களுடன் இனங்காணப்பட்டது. தற்போது அங்கு 5,513 தொற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது புள்ளிவிவரத் தகவல்களின் ஊடாக வெளியாகியுள்ளது.

சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பின்னரே இத்தகவல் அம்பலமாகியுள்ளது.

பேலியகொட மீன் சந்தைபயில் – அங்குள்ள மீன் வர்த்தகர்களுக்கு இடையிலான பணத்தாள் பறிமாற்றமே கொரோனா பரவுவதற்கான காரணமாகும்.

பிரெண்டிக்ஸ் கொத்தணி ஒக்டோபர் 03ஆம் திகதி உருவானது. அதன்பின்னர், ஒக்டோபர் 12ஆம் திகதியன்றே பேலியகொட உப-கொத்தணி உருவானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்