கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார்

🕔 October 7, 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

நாட்டில் இதுவரை 4,442 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தனர். அவர்களில் 3,274 குணடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 1,155 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments