கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு

🕔 October 8, 2020

திவுலபிடிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல்வெளியாகியுள்ளது.

இந்த தொழிற்சாலைப் பணியாளர்களில் 1034 பேரு க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

திவுலபிடிய பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 1725 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களில் பலர் வழங்கிய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் தவறானவை என கண்டறியப்பட்டுள்ளது.

தவறான முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வழங்கிய ஊழி யர்களைக் கண்டறிய புலனாய்வுத் துறையினர் தேடுதல் மேற் கொண்டுள்ளனர்.

அத்துடன் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும் சுய தனிமைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

Comments