வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

🕔 July 24, 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார்.

வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஏனைய சுகாதார அதிகாரிகள் இதற்கு உறுதியளித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாக்குச் சாவடிகள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments