Back to homepage

Tag "கல்முனை"

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு 0

🕔6.Sep 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஏ. ஜெமீலுக்கு, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தொடர்ந்தும் முன்னிலை வழங்கினால், தான் முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்

மேலும்...
பிரதேச சபை கனவு

பிரதேச சபை கனவு 0

🕔29.Aug 2017

– ஏ.எல். நிப்றாஸ் – உறவும் பிரிவும் வாழ்வில் தவிர்க்க இயலா நியதிகள். தனிமனிதர்கள், குடும்பங்கள், மத்தியிலும் தேசங்களுக்கு இடையிலும் உறவுகள் வளர்வதும் பிரிவுகள் ஏற்படுவதும் பின்னர் சிலவேளைகளில் மீளத் துளிர்ப்பதும் உண்டு. ஆனால் சில உறவுகள் பௌதீக அடிப்படையில் பிரிவைச் சந்திக்கும். வேறுசில உறவுகள் ஆத்மார்த்த அடிப்படையில் பிரிவுகளை சந்திக்கும். இது யதார்த்தங்களன் விதி.

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி 0

🕔27.Aug 2017

– எம்.வை. அமீர்- கல்முனையில் பல வருடங்களாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம், தேவைகள் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், குறித்த காரியாலயத்தை மிக விரைவில் மீண்டும் கல்முனைக்கே இடமாற்றித் தரவுள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல உறுதி வழங்கினார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த,

மேலும்...
சந்தாங்கேணி மைதான நுழை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற தீர்மானம்

சந்தாங்கேணி மைதான நுழை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற தீர்மானம் 0

🕔17.Aug 2017

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை சந்தாங்கேணி மைதான நுழைவாயில் பிரதேசத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை தற்காலிகமாக மேற்கொள்ள முடியும் எனவும், ஏனைய அனுமதிக்கப்படாத நிரந்தர கட்டடங்களை அகற்றுவதென கல்முனை பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கல்முனை சந்தாங்கேணி நுழைவாயில் பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் கட்டடங்களை அமைத்திருப்பது, எதிர்காலத்தில் குறித்த மைதானத்தின் அபிவிருத்தி

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔12.Aug 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்குரிய காலம் கனிந்துள்ளதாகவும், கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென தனியான உள்ளுராட்சி சபையை கோரிய போது, பல்வேறு எதிர் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அதனைப் பெற்றுத்தருவதாக பள்ளிவாசலில் வைத்தது

மேலும்...
துபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன்

துபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன் 0

🕔5.Aug 2017

கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளைப் போன்று அபிவிருத்தி செய்யவுள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் தனது அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து தெரிவித்திருந்தார். இந்த விடயம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தமையினை அடுத்து, அதனை நையாண்டி செய்யும் விதமாக பல்வேறு ‘மீம்’களும், பேஸ்புக் பதிவுகளும்

மேலும்...
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று, அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற, கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி; பிரதியமைச்சர் ஹரீஸ் வழங்கி வைத்தார்

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி; பிரதியமைச்சர் ஹரீஸ் வழங்கி வைத்தார் 0

🕔2.Aug 2017

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்வாதார உதவிகளை இன்று புதன்கிழமை வழங்கி வைத்தார்.இந் நிகழ்வு இன்று  புதன்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி தலைமையில் கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவான நிதி ஒதுக்கீடு மற்றும்

மேலும்...
‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார்

‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார் 0

🕔25.Jul 2017

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். ஏ.ஆர். மன்சூர் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 85 வயது. வர்த்தக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான ஏ.ஆர். மன்சூர், குவைத்

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த, ஒருங்கிணைந்த ஊடக வேலைத்திட்டத்தை, ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த நிலையில், கடந்த சனிக்கிழமை அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, இவ் வேலைத்திட்டத்தின்

மேலும்...
பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு 0

🕔20.Jul 2017

– கே.ஏ. ஹமீட் – கல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார். தென்கிழக்கு கரையோர தனியார் பஸ்

மேலும்...
முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட் 0

🕔9.Jul 2017

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். லங்கா அசோக் லேலன்ட் பி.எல்.சி. கம்பனியின் சாய்ந்தமருது – கல்முனையை மையமாகக்கொண்டு இயங்கவுள்ள கிளையினை, சாய்ந்தமருதுவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர்

மேலும்...
டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார்

டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார் 0

🕔20.Jun 2017

– அஹமட் – மலேரியா நோய் தடுப்பு தொடர்பான மூன்று வார கால பயிற்சி நெறியொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, கல்முனை பிராந்திய – மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஆரிப் நாகூர், நாளை புதன்கிழமை சீனா பயணமாகிறார். மலேரியா நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்நோய் பரவிவிடக்கூடாதவாறு பலவிதமான

மேலும்...
பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார்

பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார் 0

🕔7.Jun 2017

– மப்றூக் – ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும், சாரணிய செயற்பாட்டாளரும், மூத்த ஊடவியலாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்து, அன்னார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில காலமாக முஸ்தபா நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் அம்பாறை மாவட்டம் – கல்முனை பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார். 1945ஆம் ஆண்டு

மேலும்...
வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி

வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி 0

🕔5.Jun 2017

பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே. ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக ஒரு தொகை நிதியினை வழங்கியது. யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து, பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்