டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார்

🕔 June 20, 2017

– அஹமட் –

லேரியா நோய் தடுப்பு தொடர்பான மூன்று வார கால பயிற்சி நெறியொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, கல்முனை பிராந்திய – மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஆரிப் நாகூர், நாளை புதன்கிழமை சீனா பயணமாகிறார்.

மலேரியா நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்நோய் பரவிவிடக்கூடாதவாறு பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, மலேசியா நோய் தடுப்பு தொடர்பான பயிற்சி நெறியில் டொக்டர் ஆரிப் கலந்து கொள்ளவுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் டொக்டர் ஆரிப் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டுள்ளார்.

இவர் சாய்ந்தமருதை சொந்த இடமாகக் கொண்டவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்