வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி

🕔 June 5, 2017

ல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே. ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக ஒரு தொகை நிதியினை வழங்கியது.

யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து, பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி. யஹியாகான் மேற்படி நிதியினை பயனாளியிடம் வழங்கி வைத்தார்.

மேற்படி நிகழ்வில் யஹியாகான் பெளண்டேஷனின் சிரேஸ்ட பிரதித் தலைவரும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபருமான ஆர்.எம். அஸ்மி காரியப்பர், உபதலைவர்களான எம்.எம். பாறுக், எம்.சி.எம். மாஹிர் (ஆசிரியர்), ரீ.எல்.எம். இல்யாஸ் மற்றும் பொருளாளர் ஏ.எம். நவாஸ் உட்பட பெளண்டேஷனின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

யஹ்யாகான் பௌண்டேஷன் – மிக நீண்ட காலமாக சமூக சேவைப் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்