வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

🕔 July 21, 2017
– றிசாத் ஏ காதர் –

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த, ஒருங்கிணைந்த ஊடக வேலைத்திட்டத்தை, ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த நிலையில், கடந்த சனிக்கிழமை அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, இவ் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய, மாகாண மட்டத்திலுள்ள அரச, அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை வளாகங்களை டெங்கு நுளம்பு இல்லாத சூழலாக உருவாக்குவதே, இன்றைய தினத்தின் இலக்காகும்.

இதற்கிணங்க, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை, சிரமதான நடவடிக்கையொன்று இடம்பெற்றது.

அலுவலகத்தின் நிறைவேற்று பொறியியலாளர் என். கதீசன் தலைமையில் இடம்பெறெ்ற மேற்படி சிரமதான நடவடிக்கையில், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்