Back to homepage

Tag "ஐக்கிய நாடுகள் சபை"

நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா

நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா 0

🕔18.Sep 2021

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (18) அதிகாலை – நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். கோட்டாபய ராஜபக்ஷ – ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும்

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம் 0

🕔12.Sep 2021

இலங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐ.நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மேரி லோலரி

மேலும்...
பழங்குடி முஸ்லா ஹசன் ஆப்கான் பிரதமரானார்: அமெரிக்க புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் அவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பழங்குடி முஸ்லா ஹசன் ஆப்கான் பிரதமரானார்: அமெரிக்க புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் அவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔8.Sep 2021

ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா முஹம்மத் ஹசன் அக்ஹுந்த், தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஒமரின் கூட்டாளியாவார். இவர் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான் ஆட்சி செய்தபோது, துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்தார்ட. முன்னர் தலிபான் ஆட்சியில் கந்தஹார் மாகாண ஆளுநராகவும் இவர் பதவி

மேலும்...
பூமியில் மிக மோசமான இடங்களில் மோசமானதாக ஆப்கான் மாறி விட்டது: 03 நாட்களில் 27 குழந்தைகள் பலி

பூமியில் மிக மோசமான இடங்களில் மோசமானதாக ஆப்கான் மாறி விட்டது: 03 நாட்களில் 27 குழந்தைகள் பலி 0

🕔10.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டையின்போது, கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா.வின் சிறுவர்கள் அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது. தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின்

மேலும்...
இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம்

இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம் 0

🕔25.Mar 2021

இலங்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு 12 பேர் அடங்கிய பணிக்குழாம் ஒன்றை அமைக்கவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானம், கடந்த 23’ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் அமுலாக்கத்தின் அடிப்படையிலான

மேலும்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔23.Mar 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 47 நாடுகளைக் கொண்ட பேரவையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான்,

மேலும்...
உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு:  எவ்வளவு தெரியுமா?

உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு: எவ்வளவு தெரியுமா? 0

🕔15.Mar 2021

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டொன்களுக்கும் அதிகமான உணவு வீணாக வீசப்படுகின்றன. கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுதுகிறது. அதில் 60% வீட்டில் நிகழ்கிறது. பொதுமுடக்கம் ஒரு ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக

மேலும்...
‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’ என்பதை, மனித உரிமைப் பேரவை தீர்மானத்திலிருந்து நீக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை

‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’ என்பதை, மனித உரிமைப் பேரவை தீர்மானத்திலிருந்து நீக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை 0

🕔4.Mar 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் ‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் என, இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால், தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும் என ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்துக்கு இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி சி.ஏ. சந்திரப்பெரும

மேலும்...
ஜெனீவா கூட்டத் தொடரில், இலங்கைக்கு 47 நாடுகள் ஆதரவளிக்கும்: அமைச்சர் சரத் வீரசேகர

ஜெனீவா கூட்டத் தொடரில், இலங்கைக்கு 47 நாடுகள் ஆதரவளிக்கும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔15.Feb 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். “நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம்

மேலும்...
உடல்களை பலாத்காரமாக தகனம் செய்கின்றமை முடிவுக்கு வரவேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

உடல்களை பலாத்காரமாக தகனம் செய்கின்றமை முடிவுக்கு வரவேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல் 0

🕔26.Jan 2021

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை பலாத்காரமாக தகனம் செய்யும் கொள்கையினை இலங்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு பலாத்காரமாக உடல்களை தகனம் செய்கின்றமையானது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும், தற்போதுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றைத்

மேலும்...
ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு

ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2021

– பாறுக் ஷிஹான் – “ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம்” என, சர்வமத நல்லிணக்கத்துக்கான பிரதிநிதி மற்றும் தமிழ்மொழி அடங்கலாக பன்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படும் பொஹவந்தலாவ

மேலும்...
இரவு உணவின்றி ஒவ்வொரு இரவும் 69 கோடி பேர் உறங்கச் செல்கின்றனர்: மனதை வருத்தும் ஆய்வு அறிக்கை

இரவு உணவின்றி ஒவ்வொரு இரவும் 69 கோடி பேர் உறங்கச் செல்கின்றனர்: மனதை வருத்தும் ஆய்வு அறிக்கை 0

🕔19.Sep 2020

உலகில் சுமார் 690 மில்லியன் பேர் ஒவ்வொரு இரவிலும் உணவின்றி உறங்கச் செல்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அவர்களில் மூவரில் ஒருவர் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பின்புலத்தில், இலங்கையில் வருடாந்தம் 270,000 தொன் பழங்களும் மரக்கறிகளும் அழிவடைவதுடன், இதனால் 20 பில்லியன் ரூபா இழப்பு

மேலும்...
ஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு

ஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு 0

🕔3.Jul 2020

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பணிகளுக்காக இஸ்ரேலில் இயங்கிவரும் காரில், பெண் ஒருவருடன் ஐ.நா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட விவகாரம் தொடர்பாக, அப்போது அந்த காரில் இருந்த இரண்டு ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் ஐ.நா அனுப்பியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் காணொளி கடந்த மாதம்

மேலும்...
கொரோனாவினால், 50 கோடி மக்கள் ஏழைகளாவர்: ஐ.நா. அறிக்கை

கொரோனாவினால், 50 கோடி மக்கள் ஏழைகளாவர்: ஐ.நா. அறிக்கை 0

🕔9.Apr 2020

கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகில் ஏழ்மை நிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கப் போவது இதுவே முதல்முறை என அந்த அறிக்கை கூறுகிறது. உலகிலுள்ள

மேலும்...
கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை

கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை 0

🕔20.Mar 2020

வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். காட்டுத்தீ போன்று கொரோனா வைரஸ் பரவக்கூடியதெனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும் அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்