உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு: எவ்வளவு தெரியுமா?

🕔 March 15, 2021
The Food Waste Collection - Eco-Quartier NDG

லகளவில் ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டொன்களுக்கும் அதிகமான உணவு வீணாக வீசப்படுகின்றன.

கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுதுகிறது. அதில் 60% வீட்டில் நிகழ்கிறது.

பொதுமுடக்கம் ஒரு ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக தோன்றுகிறது. குறைந்தபட்சம் பிரிட்டனில் உணவு வீணாவது குறைந்துள்ளது.

மக்கள் தங்கள் ஷொப்பிங் மற்றும் உணவை மிகவும் கவனமாக திட்டமிட்டு வருகின்றனர் என்று இந்த அறிக்கையில் நீடித்த தொண்டு அமைப்பான ‘ராப்’(WRAP) தெரிவிக்கிறது. இந்த அமைப்பு ஐநாவுடன் கூட்டாக இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இதை தொடரும் ஒரு முயற்சியாக, உணவுப்பொருட்கள் வீணாவதைக் குறைக்கும் சமையலறை பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்காக நன்கு பிரபலமான சமையல் கலைஞர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கை உலகளாவிய பிரச்சினையை முன்னிலைப்படுத்தியுள்ளது. இது “முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிகப் பெரியது” என்று ராப் அமைப்பைச்சேர்ந்த ரிச்சர்ட் ஸ்வன்னெல் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் 923 மில்லியன் டொன் உணவு, 40 டொன் சரக்கை ஏற்றக்கூடிய 23 மில்லியன் ட்ரக்குகளை நிரப்பும். அதாவது இந்த ட்ரக்குகளை ஒன்றுக்கொன்று தொடும்படி நிறுத்தினால், அது பூமியை ஏழு முறை வட்டமிட போதுமானது”.

நுகர்வோர் தாங்கள் சாப்பிட முடிவதைவிட அதிகமாக வாங்குவது முன்னர் பணக்கார நாடுகளுக்கு மட்டுமேயான ஒரு பிரச்சனை என்று கருதப்பட்டது. ஆனால் “கணிசமான” அளவு உணவு, “எங்கு பார்த்தாலும்” வீணாகிறது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது. .

குறைந்த மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளில் பிரச்சனையின் அளவு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை வெளிப்படுத்தக்கூடிய கண்டுபிடிப்புகளில் இடைவெளிகள் உள்ளன. உதாரணமாக இந்த அறிக்கையால் “தன்னிச்சையான” மற்றும் “தெரிந்தே” நிகழும் உணவு வீணாக்கலை வேறுபடுத்த முடியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்