பழங்குடி முஸ்லா ஹசன் ஆப்கான் பிரதமரானார்: அமெரிக்க புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் அவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

🕔 September 8, 2021

ப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா முஹம்மத் ஹசன் அக்ஹுந்த், தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஒமரின் கூட்டாளியாவார்.

இவர் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான் ஆட்சி செய்தபோது, துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்தார்ட.

முன்னர் தலிபான் ஆட்சியில் கந்தஹார் மாகாண ஆளுநராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

இவரை பிரதமர் பதவிக்கு தலிபான் அதி உயர் தலைவர் ஹிபத்துல்லா அஸுந்த்ஸாதா தெரிவு செய்துள்ளார்.

இடைக்கால பிரதமர் முல்லா ஹசன் – கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர் என்றும், இவரது வயது 58 எனவும் அறியப்படுகிறது. இவர் ‘நூர்சாய்’ பழங்குடியைச் சேர்ந்தவர்.

முல்லா ஹஸன் அகுந்த் – ஐ.நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ யினால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார்.

தொடர்பான செய்தி: ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு: ‘இஸ்லாமிய எமிரேட்’ எனவும் பெயர் மாற்றம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்