ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு: ‘இஸ்லாமிய எமிரேட்’ எனவும் பெயர் மாற்றம்

🕔 September 7, 2021
புதிய பிரதமர் முல்லா முகம்மத் ஹசன்

ப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் விவரங்களை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு;

அமைச்சர்கள் விவரம்

பிரதமர் – முல்லா முகம்மத் ஹசன் அக்ஹுந்த் (இவர் ஐ.நாடுகள் சபையின் கறுப்புப் பட்டியலில் உள்ளார்)

துணை பிரதமர் – மெளலவி அப்துல் கனீ பரதர்,

சிராஜூதீன் ஹக்கானி – உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் (இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் – இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது)

பாதுகாப்பு – மெளலவி யாகூப் (இவர் தலிபான் நிறுவுநர் முல்லா ஒமரின் மகன்)

வெளியுறவு – ஆமிர்கான் முட்டாக்கி

வெளியுறவு துணை அமைச்சர் – அபாஸ் ஸ்டானிக்ஸாய்

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அராசங்கம் அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை (இஸ்லாமிய ஷரீஆ) நிலைநாட்டுமாறு தலிபான் தலைவர் மெளலவி ஹிபத்துல்லா அக்ஹுன்ஸாதா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்