
அதிபர், ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.
“கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில் சிக்கல் உள்ளது.
இதனால் அடுத்த வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அவர்களது சம்பள முரண்பாட்டினை கட்டம் கட்டமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.



