Back to homepage

Tag "இலங்கை"

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ‘ஸ்மாட்’ தொலைபேசிகளைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவு

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ‘ஸ்மாட்’ தொலைபேசிகளைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவு 0

🕔31.Mar 2021

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை

மேலும்...
31 புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நாடுகடத்தியது

31 புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நாடுகடத்தியது 0

🕔31.Mar 2021

புகலிடக் கோரிக்கையாளர்களான 31 தமிழர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நேற்று நாடுகடத்தியது. இதேவேளை நாடுகடத்தப்பட கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்னர். புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஜேர்மன் மனிதநேய மற்றும் அகதிகள் நலன்சார் அமைப்புக்கள், சட்ட வல்லுனர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினாலும், புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையிலும் கைது

மேலும்...
இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம்

இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் 0

🕔29.Mar 2021

இலங்கையில் 1250 வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் தலையீட்டின் மூலம் இந்த வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும் வரை இலங்கையில் அவர்களுக்கு தற்காலிக அரசியல் தஞ்சம் வழங்கப்படவுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈராக், மாலைத்தீவு உள்ளிட்ட

மேலும்...
இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம்

இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம் 0

🕔25.Mar 2021

இலங்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு 12 பேர் அடங்கிய பணிக்குழாம் ஒன்றை அமைக்கவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானம், கடந்த 23’ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் அமுலாக்கத்தின் அடிப்படையிலான

மேலும்...
அதிக கடன்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை: நாடாளுமன்றில் கபீர் ஹாசிம் தகவல்

அதிக கடன்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை: நாடாளுமன்றில் கபீர் ஹாசிம் தகவல் 0

🕔24.Mar 2021

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசாங்கம் மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றஞ் சாட்டியுள்ளார். பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும்

மேலும்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔23.Mar 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 47 நாடுகளைக் கொண்ட பேரவையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான்,

மேலும்...
‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’ என்பதை, மனித உரிமைப் பேரவை தீர்மானத்திலிருந்து நீக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை

‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’ என்பதை, மனித உரிமைப் பேரவை தீர்மானத்திலிருந்து நீக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை 0

🕔4.Mar 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் ‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் என, இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால், தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும் என ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்துக்கு இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி சி.ஏ. சந்திரப்பெரும

மேலும்...
இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து 0

🕔24.Feb 2021

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை இலங்கை வந்தடைந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து, இரண்டு

மேலும்...
உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை

உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை 0

🕔23.Feb 2021

இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பிலான விசேட கணக்கறிக்கை, பொது கணக்குகள் குறித்த நாடாளுமன்ற தெரிவு குழு (கோபா) முன்னிலையில் இன்று மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளது. உலகில் அதிகளவு யானைகளின் மரணங்கள் நிகழும் நாடாக இலங்கை மாறியுள்ளமை, முன்னதாக இடம்பெற்ற கோபா குழுக் கூட்டத்தில் தெரியவந்தது. நாட்டின் மனித – யானை மோதல் தொடர்பில் பல

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம் 0

🕔22.Feb 2021

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானியா, கனடா, மொன்டிநீக்ரோ,

மேலும்...
இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Feb 2021

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அந்த மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் குமார் தேப் உரையாற்றிய போதே இதனைக் கூறினார். இந்தியாவையும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன 0

🕔4.Feb 2021

நாட்டின் 73 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள்,  நிதியாளர் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.

மேலும்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு 0

🕔1.Feb 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறு எதிர்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக ட்விட்டர் கணக்கில், இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோகள் –

மேலும்...
உடல்களை பலாத்காரமாக தகனம் செய்கின்றமை முடிவுக்கு வரவேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

உடல்களை பலாத்காரமாக தகனம் செய்கின்றமை முடிவுக்கு வரவேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல் 0

🕔26.Jan 2021

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை பலாத்காரமாக தகனம் செய்யும் கொள்கையினை இலங்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு பலாத்காரமாக உடல்களை தகனம் செய்கின்றமையானது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும், தற்போதுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றைத்

மேலும்...
ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை

ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை 0

🕔15.Jan 2021

இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேற்று 14ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலையடுத்து அந்நாட்டு தேசிய கொள்கைத்திட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தாய்லாந்து, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்