தெற்கு ஆசியாவில் அதிகளவில் ‘ஸ்மாட்’ தொலைபேசிகளைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவு

🕔 March 31, 2021

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள்.

தெற்கு ஆசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்