இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

🕔 February 24, 2021

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை இலங்கை வந்தடைந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து, இரண்டு நாட்டு பிரதமர்களின் முன்பாக, 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைத்சாத்திடப்பட்டன.

அந்த ஒப்பந்தங்களின் விவரங்கள் வருமாறு;

  1. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  2. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டு சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  3. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  4. கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு.
  5. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்