31 புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நாடுகடத்தியது

🕔 March 31, 2021

புகலிடக் கோரிக்கையாளர்களான 31 தமிழர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நேற்று நாடுகடத்தியது.

இதேவேளை நாடுகடத்தப்பட கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்னர்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஜேர்மன் மனிதநேய மற்றும் அகதிகள் நலன்சார் அமைப்புக்கள், சட்ட வல்லுனர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினாலும், புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையிலும் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டசெல்டார்ஃப் (Düsseldorf) விமான நிலையத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜேர்மன் நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளை சேர்ந்த பலரும் தமிழர்களை இவ்வாறு நாடுகடத்துவதை நிறுத்தக் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments