Back to homepage

Tag "றிஷாட் பதியுதீன்"

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை 0

🕔13.Jul 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம், இன்று (13) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானது. ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதன் போது – எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் அநுராதபுரம் ஊடாக புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த

மேலும்...
இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0

🕔11.Jul 2024

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (10)  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் தமது நன்றிகளை தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦

மேலும்...
ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு

ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு 0

🕔4.Jun 2024

பரீட்சை திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமையானது, திட்டமிட்ட சதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔1.Jun 2024

– எம்.வை. அமீர் – முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபானின் மகனும், கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ரிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி

மேலும்...
பலஸ்தீனத்துக்காக துணிச்சலுடன் செயலாற்றியவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது: ஈரான் ஜனாதிபதியின் இறப்பு குறித்து றிஷாட் பதியுதீன் கவலை

பலஸ்தீனத்துக்காக துணிச்சலுடன் செயலாற்றியவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது: ஈரான் ஜனாதிபதியின் இறப்பு குறித்து றிஷாட் பதியுதீன் கவலை 0

🕔20.May 2024

பலஸ்தீன மண்ணுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் துணிச்சலுடன் அளப்பெரிய செயலாற்றிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதில், முன்னின்று உழைத்த, துணிச்சல் மிக்க முன்னணி அரசியல் தலைவராக இப்றாகிம் ரைசி

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் 0

🕔29.Apr 2024

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான உதவிகளை, இந்திய அரசின் நிதி பங்களிப்பினூடாக பெற்றுத்தருமாறு, இந்திய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

மேலும்...
கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔8.Jan 2024

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ்

மேலும்...
மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை 0

🕔19.Dec 2023

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீளத்திறக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்தும் இதனை மூடிவைத்திருப்பது உகந்ததல்ல எனவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு

மேலும்...
தனது நாடாளுமன்ற உரையை  நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு

தனது நாடாளுமன்ற உரையை நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔6.Dec 2023

நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று முன்தினம் (04) நாடாமன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் இன்று (06) நாடாளுமன்றில் தொடர்ந்து அவர் பேசுகையில்; “நீதியமைச்சு தொடர்பான விவாத தினத்தன்று

மேலும்...
“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔1.Dec 2023

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (டிசம்பர் 01) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ –

மேலும்...
கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) நாடாளுமன்றில் இந்தக் கோரிக்கையை

மேலும்...
கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை

கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை 0

🕔21.Sep 2023

வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று (20) உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட்

நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட் 0

🕔28.Aug 2023

அதிகாரத்தில் இருக்கும் போது – மக்களுக்கு நாம் வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்றன எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – முசலி வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் முசலி தேசிய

மேலும்...
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதை, இஸ்லாத்துக்கு எதிரான ஏஜென்டுகள் உத்வேகப்படுத்துகின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதை, இஸ்லாத்துக்கு எதிரான ஏஜென்டுகள் உத்வேகப்படுத்துகின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு 0

🕔8.Jul 2023

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் – மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். நேற்று முன்தினம் (06)

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம் 0

🕔22.Nov 2021

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (21) கொழும்பில் நடைபெற்ற போது, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (22ஆம் திகதி) வாக்கெடுப்பிலும், டிசம்பர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்