முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு

🕔 June 1, 2024

– எம்.வை. அமீர் –

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபானின் மகனும், கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ரிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எல்.எம். அய்யூப்கான் தலைமையில், இந்த நிகழ்வு நேற்று (31) மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

ரிஸ்லி முஸ்தபா தனது ஆரவாளர்களுடன் மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட மேற்படி நிகழ்வில், அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவர் கே.எம். ஜவாத், கட்சியின் பிரதி செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம். தாஹிர் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது முஸ்லிம் காங்கிரஸின் பல ஆதரவாளர்கள் – றிஸ்லி முஸ்தபாவுடன் சேர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்