அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு 0

🕔18.Jul 2024

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு ஏன் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ள அவர்; அரசாங்கம் கேம் அடிப்பதற்காக காலம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று

மேலும்...
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு 0

🕔18.Jul 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு இஸ்லாத்துக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வருடம் மார்ச் 28ஆம் திகதி தீர்ப்பளித்தது. இந்தப் பின்னணியில் ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்பு

மேலும்...
மாதந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்ட நீர்வழங்கல் சபை தற்போது 6.2 பில்லியன் ரூபாய் லாபம் பெறுகிறது: அமைச்சர் ஜீவன்

மாதந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்ட நீர்வழங்கல் சபை தற்போது 6.2 பில்லியன் ரூபாய் லாபம் பெறுகிறது: அமைச்சர் ஜீவன் 0

🕔18.Jul 2024

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமையை அடுத்து, நீர்க் கட்டணக் குறைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் சபைக்கு இதற்கு முன்னர் மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டு வந்ததாகவும், தற்போது 6.2

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு அறிவிப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு அறிவிப்பு 0

🕔17.Jul 2024

சிறையிலிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் – நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் கருத்தைப் பெறாமல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ, அரசியல் பிரமுகர்களோ இது தொடர்பில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்க முடியாதுள்ளது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 0

🕔17.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் எந்த வகையான தேர்தலை நடத்துவதற்குமான செலவாக 10 பில்லியன் ரூபாய் நிதி, 2024ஆம் ஆண்டு வரவு –

மேலும்...
நாட்டை விட்டு 1300 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நாட்டை விட்டு 1300 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔17.Jul 2024

நாட்டிலிருந்து1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17) சென்றிருந்தபோது அவர் இதனைக் கூறினார். இலங்கையில் 24 ஆயிரம் அரச வைத்தியர்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் 3,500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ளதாவும், அவர்களுக்கான நியமனம்

மேலும்...
ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔17.Jul 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔17.Jul 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். டயானா கமகேயினுடைய சட்டத்தரணிகள், இந்த வழக்கை டயானா தொடர விரும்பவில்லை எனக் கூறி, மனுவை வாபஸ் பெற்றுள்ள்னர். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்த்து வாக்களிப்பது என, ஐக்கிய மக்கள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில், மைத்திரி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30க்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில், மைத்திரி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30க்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Jul 2024

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான வழக்கில் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் விதித்த அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின்

மேலும்...
போர் செய்யும் அம்பினால் முதுகு சொறிந்த கதை: அக்கரைப்பற்று, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் மூக்குடைந்த  ‘GMOA’

போர் செய்யும் அம்பினால் முதுகு சொறிந்த கதை: அக்கரைப்பற்று, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் மூக்குடைந்த ‘GMOA’ 0

🕔15.Jul 2024

– மரைக்கார் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனா – இன்றைய தினம் மீண்டும் தனது பொறுப்பை ஏற்றுள்ளார். இது ‘GMOA’ எனப்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது தோல்வியாகும். முதலாவது தோல்வி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், அந்த வைத்தியசாலையில் கடமையாற்றக்

மேலும்...
ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி 0

🕔15.Jul 2024

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். ”அரசியல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் நாட்டை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு 0

🕔15.Jul 2024

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் (15) தள்ளுபடி செய்துள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர்

மேலும்...
மின்சாரக் கட்டணத்தை 22.5 வீதத்தினால் குறைப்பதற்கு அனுமதி

மின்சாரக் கட்டணத்தை 22.5 வீதத்தினால் குறைப்பதற்கு அனுமதி 0

🕔15.Jul 2024

மின்சார கட்டணத்தை 22.5 வீதத்தால் குறைப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெனாண்டோ தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தத்தின்படி, வீடுகளில் 30 அலகுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களின் கட்டணம் 08 ரூபாயில் இருந்து 05 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 61 தொடக்கம்

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 75 நாட்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 75 நாட்களின் பின்னர் முடிவுக்கு வந்தது 0

🕔15.Jul 2024

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை இன்று (15) தொடக்கம் கைவிடத் தீர்மானித்துள்ளனர். கடந்த 75 நாட்களாக பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் கல்வி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத்தொடர்ந்து – இந்த முடிவு

மேலும்...
தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல்

தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல் 0

🕔15.Jul 2024

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிப்பதற்கு 2033ஆம் ஆண்டு வரை அவகாசம் வழங்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றம் விதித்த 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையில் 58

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்