காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது

🕔 July 2, 2024

ன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் ஆணுப்பை வெட்டிய பெண் வைத்தியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

வார்ட் கவுன்சிலரான (councillor of Ward) பாதிக்கப்பட்டவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தன்னை காதலன் திருமணம் செய்து கொள்ள தயங்கியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். இறுதியில் நீதிமன்றத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி அந்தப் பெண் தனது காதலரை வற்புறுத்தியதாகவும், ஆனால் காதலன் திட்டமிட்ட நாளில் சமூகமளிக்கவில்லை எனவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து காதலனை பழிவாங்கும் விதமாக, அவரை தனது வீட்டுக்கு வரவழைத்த காதலி, அவரின் ஆணுறுப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 25 வயதுடைய பெண் வைத்தியரும், அவரின் காதலனும் திருமணமாகாதவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்