டொலர்களுக்கு விலைபோகியுள்ள இரண்டு எம்.பிகள் தொடர்பில் தகவல்

🕔 July 8, 2024

க்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

அவர்கள் கம்பஹா மற்றும் களுத்துறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் டொலர்கள் மூலம் கிடைத்த வெகுமதிகளுக்கு விலைபோயுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

”நாங்கள் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்தாலும் தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு எதிர்க்கட்சியில் இணைவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்