சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

🕔 July 3, 2024
போலே பாபா

ந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நேற்று (02) ’போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது.

நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் மத குருவின் கால் பாத மண்ணை எடுப்பதற்காக – மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பக்தர்களும் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் பெண்களாவர்.

மேற்படி நிகழ்வை நடத்துவதற்காக அனுமதி கோரும் போது, சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அரச அதிகாரிகளிடம் கூறியிருந்தனர். ஆனால் அங்கு சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் என தெரிவிக்டகப்படுகிறது.

பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் அங்கு நிற்காமல் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரிடம் இருந்தோ அல்லது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த அறிக்கையும் வரவில்லை.

நேற்று மதியம் 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிக்கந்தராவ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார் எனவும், அவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர் எனவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்