ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி

🕔 July 8, 2024

னாதிபதித் தேர்ததலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோருமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவ என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த மனு மீதான தீர்ப்பை இன்று (08) வழங்கியது.

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் ஓரிடத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்களாகவும் மற்றொரு இடத்தில் 06 வருடங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளதால், ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்குமாறு தொழிலதிபர் சமிந்திர தயான் லெனாவ என்பவர் தாக்கல் செய்த – அடிப்படை உரிமைகள் மனுவில் கோரப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வர்த்தகர், இந்த விளக்கத்தை வழங்கும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமெனவும் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில், தொழிலதிபர் லெனாவ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தொடர்பாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட மூன்று தரப்புகளால் இடைநிலை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, ப்ரீத்தி பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா ஆகிய 05 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வர்த்தகரின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, ​​தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக விளங்குவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதனையடுத்து குறித்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்