ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில், உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

🕔 July 8, 2024

ரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) அழைக்கப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைக் கூறினார்.

மேலும் சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலதிபர், சி.டி. லெனவ என்பவர் இந்த மனுவை கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார்.

குறித்த மனுவில் அரசியலமைப்பின் பிரகாரம் தற்போ​தைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைகாலத் தடை உத்தரவினைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்