கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம்

🕔 July 2, 2024

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவருக்கு – வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அறிவித்தல் விடுத்த குற்றவாளிகளில் கஞ்சிபானை இம்ரானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சிப்பானை இம்ரான் 2019இல் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர், துபாயில் இருந்து கொண்டு குற்றச் செயல்களை இயக்கி வந்தார்.

துபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் மன்னார் ஊடாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் புனாய்வு பிரிவான ரோ (RAW) இதற்கு உதவியதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்து பிரான்ஸ் சென்ற கஞ்சிப்பான இம்ரான், அங்கு அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்