சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார்

🕔 July 1, 2024

லங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு, கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சம்பந்தன் 21422 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட 07 வேட்பாளர்களில் – கதிரவேலு சண்முகம் குகதாசன் 16770 விருப்பு வாக்குகளைப் பெற்று, சம்பந்தனுக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருந்தார்.

இந்தப் பின்னணியில், ஆர். சம்பந்தன் நேற்று காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுவதற்கான தகைமையினைப் பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணித்தால் அல்லது பதவி இழந்தால், அந்த வெற்றிடத்துக்கு – அவரின் கட்சியில் அல்லது குழுவில் போட்டியிட்டு, அவருக்கு அடுத்த அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர், அரசியலமைப்பின் படி – நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுதல் வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்