ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

🕔 July 3, 2024

ற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் – அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் வழங்கப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை தொழிலதிபர் சி.டி. லெனவ என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் சரியான பதவிக் காலத்தை நீதிமன்றம் தெளிவுபடுத்துமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வழங்கப்படும் வரை – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு – அரசியல் பரப்பிலும், இந்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும், தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 19வது திருத்தத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தை – ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு நீடிக்க இலங்கையின் அரசியலமைப்பு அனுமதிக்கும் என்று, கடந்த மாதம் ஒரு ஊடக அறிக்கை இருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்