பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை

🕔 July 5, 2024
கியர் ஸ்டாமர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா

பிரித்தனியாவில்14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி சந்தித்திருக்கிறது.

இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் (Keir Starmer) பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராக கியர் ஸ்டாமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பதவியை இழக்கிறார். தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 412 இடங்களை வென்றுவிட்டது. கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 121 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

பெரும்பாலான தொகுதிகளில் வென்றாலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கு அதிக ஆதரவு இல்லை.

அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இடங்களில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு குறைவாக இருப்பது இதுவரையிலான முடிவுகளில் தெரியவந்திருக்கிறது என, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்