ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம்

ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம் 0

🕔7.Dec 2021

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானமையை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிடப்பட்ட பதாகையொன்றில் – கொல்லுரேயின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் படம் அச்சிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் கீழ் வரும், வாரியபொல பிரதேச சபை வெளியிட்ட இரங்கல் பதாகையிலேயே, முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லின் படம் உள்ளது.

மேலும்...
ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு

ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு 0

🕔7.Dec 2021

ஃபேஸ்புக் சமூக ஊடகத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர். தங்களுக்கு எதிரான போலிச் செய்திகள் பரவ அனுமதித்தாகவே இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளனர். மியன்மாரின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை சமூகமான ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறைகளைத் தூண்டுவதற்குகு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட போலிச் செய்திகள் உதவின என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக்கிடம்

மேலும்...
சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது

சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது 0

🕔7.Dec 2021

– பாறுக் ஷிஹான் – சிறு வயதுடைய தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம்

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பண்டாரநாயக்க, கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பண்டாரநாயக்க, கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔7.Dec 2021

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.எல். பண்டாரநாயக்க தனது கடமைகளை இன்று (7) பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் அவர் தனது கடமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷட அதிகாரியான

மேலும்...
பிரியந்தவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம்

பிரியந்தவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔7.Dec 2021

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன வெள்ளிக்கிழமை (03) ஒரு கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். பிரியந்தவின் குடும்பத்துக்கு மனிதாபிமான அடிப்படையில்

மேலும்...
ஒழுக்கங் கெட்ட உறுப்பினர்கள்; கண்டும் காணாத தவிசாளர்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அவலம்

ஒழுக்கங் கெட்ட உறுப்பினர்கள்; கண்டும் காணாத தவிசாளர்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அவலம் 0

🕔7.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் சிலர், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் – எவ்வகையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டுமென ஒழுக்கக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கு மாறாக சில உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். அட்டாளைச்சேனை

மேலும்...
பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது

பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது 0

🕔7.Dec 2021

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பாகிஸ்தான் பஞ்சாப் பொலிஸார் நேற்று (06) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். “இலங்கைப் பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொன்று, அவரின் உடலை இழிவுபடுத்திய விவாகரத்தில் தொடர்புடைய மிகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான பில்லி (Billi) என்கிற இம்தியாஸ் என்பவரை

மேலும்...
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார் 0

🕔7.Dec 2021

வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தனது 83 ஆவது வயதில் காலமானார். வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த 03 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிகிச்கை பெற்று வந்தார். வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே, ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது

போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது 0

🕔6.Dec 2021

– பாறுக் ஷிஹான் – திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில், அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல் 0

🕔6.Dec 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று (06) நிறைவேறியது. முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று சபை அமர்வு கூடியமையினை அடுத்து, அவர் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை

மேலும்...
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை சர்வமதக் குழு சந்திப்பு

படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை சர்வமதக் குழு சந்திப்பு 0

🕔6.Dec 2021

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள சர்வமதத் தலைவா்களைக் கொண்ட குழுவினர், இன்று திங்கட்கிழமை (6) பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத்தை சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு உயர் ஸ்தானிகள் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாகிஸ்தான் நாட்டில் பொறியியலாளர் பிரியங்க குமார  கொலை

மேலும்...
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு 0

🕔6.Dec 2021

– பாறுக் ஷிஹான் – அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர் கிராமம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை (11), நீதிமன்ற

மேலும்...
அரச வானொலி விருது பெற்ற, பிறை எப்.எம் அறிவிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு

அரச வானொலி விருது பெற்ற, பிறை எப்.எம் அறிவிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு 0

🕔6.Dec 2021

– எம்.ஜே.எம். சஜீத் – அரச வானொலி விருது வழங்கும் விழாவில் இம்முறை விருதுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிராந்திய சேவை பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளர்கள் எம்.ஏ. றமீஸ், ஜே. வஹாப்தீன் ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று (05) நடைபெற்றது. அம்பாறை மாவட்ட

மேலும்...
மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Dec 2021

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி வின் ம்யின், இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை

மேலும்...
பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை

பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை 0

🕔6.Dec 2021

மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை விடுதலை செய்யுமாறு மூவரடங்கிய நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அமல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்