அரச வானொலி விருது பெற்ற, பிறை எப்.எம் அறிவிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு

🕔 December 6, 2021

– எம்.ஜே.எம். சஜீத் –

ரச வானொலி விருது வழங்கும் விழாவில் இம்முறை விருதுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிராந்திய சேவை பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளர்கள் எம்.ஏ. றமீஸ், ஜே. வஹாப்தீன் ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று (05) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் தலைவர் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹனீபா இஸ்மாயில் தலைமையில் ஒலுவில் கிறீன் வில்லா அரங்கில் நேற்று (05) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, இலங்கை வானொலி பிறை எம்.எம் பிரதிப் பணிப்பாளர் பசீர் அப்துல் கையூம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பட்டயக் கணக்காளர் ஏ.எல். அமீன் கௌரவ அதிதியாய் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தேசிய வானொலி விருது பெற்ற பிறை எப்.எம் அறிவிப்பாளர்கள் எம்.ஏ. றமீஸ் மற்றும் ஜே. வஹாப்தீன் ஆகியோர் பொன்னாடை போரத்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கையின் வானொலி ஊடகத்துறையில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அரச வானொலி விருது விழா – 2021, அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். வானொலிக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.

சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக அறிவிப்பாளர், ஆசிரியர் மற்றும் ஊடகவியலாளர் எம்.ஏ. றமீஸ் தெரிவு செய்யப்பட்டதுடன், வானொலி சிறந்த நாடகப் பிரதியாளருக்காக ஆசிரியர், அறிவிப்பாளர் ஜே. வாஹாப்தீன் தெரிவு செய்யப்பட்டு தேசிய விருதுகள் வழங்கி கொரவிக்கப்பட்டனர்.

தமிழ் பட்டறை இலக்கியப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில், ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஹாசீம், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி. குணாளன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஓய்வு நிலை மாவட்ட பணிப்பாளர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ், நில அளவையாளர் ஏ.எல். முகைதீன்பாவா, ஓய்வு நிலை கோட்டக் கல்வி அதிகாரி எஸ். ராசமாணிக்கம், அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்த்துறை ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. சவுறுதீன், பிரதி அதிபர் எம். அப்துல் றஸாக், ஆசிரியர் எஸ்.ஏ. றபியுஸ் மௌலானா, அக்கரைப்பற்று மஸ்ஜிதுல் மீரா நம்பிக்கையாளர் சபைத் தலைவர் பி.ரி. செய்னுலாப்தீன், பிரதேச செயலக உத்தியோகதர் எம்.எச். ஜெய்னுதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இடமிருந்து வலம்: வஹாப்தீன் , றமீஸ் – விருகளைப் பெற்றுக்கொண்டபோது…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்