பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை

🕔 December 6, 2021

த்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை விடுதலை செய்யுமாறு மூவரடங்கிய நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்களுக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்கு பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தொடர முடியாத காரணத்தினால் அவர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரியிருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த 11 குற்றச்சாட்டுக்கள் மீது தொடர்ந்து வழக்கு நடத்த முடியாததால், அவற்றில் இருந்து பிரதிவாதிகளை விடுதலை செய்வதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்